அதிமுக இணைப்புக்கு எதிராக வேலையை காட்டிய தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்- சுளுக்கெடுத்த 'கணக்கு பிள்ளை'

அதிமுக அணிகள் இணைப்பு தாமதத்துக்கு காரணமே தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் 3 அமைச்சர்கள்தான் என கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுக இணைப்புக்கு எதிராக வேலையை காட்டிய தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்-வீடியோ

    சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்கு விவகாரத்தில் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் 3 பேர் முட்டுக் கட்டை போட்டனர். இந்த தகவல் டெல்லிக்கு பாஸாக தமிழகத்து "கணக்குபிள்ளை' போட்ட போட்டில் பொட்டிப் பாம்பாக அடங்கினராம் அந்த 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள்.

    அதிமுக அணிகள் இணைப்பில் சுமார் 2 மணிநேர தாமதம் ஏற்பட்டது. திடீரென இணைப்பில் பிரேக் விழுந்தது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள்தான் இதற்கு காரணம் என விவரித்தனர்.

    ஓபிஎஸ் அணியின் நிபந்தனைப் படி சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி தரப்பு நிறைவேற்ற தயாராகவே இருந்ததாம். ஆனால் தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் 3 பேர் இப்படி ஒரு தீர்மானம் போட்டால் நாங்கள் கையெழுத்து போடமாட்டோம் என முரண்டுபிடித்திருக்கின்றனர்.

    ஓபிஎஸ் அணி அதிருப்தி

    ஓபிஎஸ் அணி அதிருப்தி

    இத்தகவல் ஓபிஎஸ் அணிக்கு தெரிவிக்க கடும் அதிருப்தி அடைந்து போனார்களாம். இதனால் இணைப்பு இன்று நடைபெறாது என்கிற நிலைமைதான் இருந்ததாம்.

    கணக்குப்பிள்ளைக்கு தகவல்

    கணக்குப்பிள்ளைக்கு தகவல்

    இந்த தகவலை கேள்விபட்ட டெல்லி, தமிழகத்தில் இருக்கும் கணக்குபிள்ளையை தொடர்பு கொண்டது. இந்த கணக்கு பிள்ளையோடுதான் கடந்த ஒரு மாத காலமாக இரு அணியினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    டோஸ்விட்ட கணக்குப்பிள்ளை

    டோஸ்விட்ட கணக்குப்பிள்ளை

    இதற்காகவே அதிமுக தலைமை அலுவலகத்தில் உரையாற்றிய மூத்த தலைவர் ஒருவர் மறைமுகமாக இணைப்புக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி எனவும் கூறியிருந்தார். தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்களை நேரடியாகவே தொடர்பு கொண்ட கணக்குப் பிள்ளை லெப்ட் ரைட் விட்டு மிரட்டியிருக்கிறார்.

    கட்டளைபோட்ட கணக்கு பிள்ளை

    கட்டளைபோட்ட கணக்கு பிள்ளை

    பின்னர் இரு அணிகளுடனும் ஆலோசனை நடத்தியபோது, சசிகலா விவகாரத்தை நிதானமாக கையாண்டு கொள்ளலாம். முதலில் இணையுங்கள் என கட்டளைபோட்டாராம் கணக்குப் பிள்ளை. இதையடுத்துதான் சொன்ன பேச்சு கேட்கும் கிளிபிள்ளைகளாக அடித்து பிடித்து அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஐக்கியமானார்களாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+