எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்
கருணாஸ் உட்பட 3 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் இன்று சந்தித்தார். அப்போது கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.

தனித்தனி கடிதம்
இந்த எம்.எல்.ஏக்களும் தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித் தனியே ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தினகரன் அணியில் அதிகாரப்பூர்வமாக 21 எம்.எல்.ஏக்கள் இருப்பது உறுதியானது.

தினகரன் சந்திப்பு
முன்னதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரனும் சந்தித்து பேசினார். அப்போது மேலும் 3 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என வலியுறுத்தினார் தினகரன்.

நல்ல முடிவு வரும்
பின்னர் இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆளுநரிடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அவரும் நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார் என்றார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications