காசிமேட்டில் பயங்கரம்.. படகில் படுத்திருந்தவரை திருடன் என நினைத்து அடித்தே கொலை.. 3 மீனவர்கள் கைது
படகில் படுத்திருந்தவரை அடித்தே கொன்ற 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசிமேடு: சென்னை காசிமேட்டில் விசைப்படகில் போதையில் படுத்திருந்தவரை திருடன் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் அடித்தே கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசி மேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், ஐயப்பன், ராஜா. இவர்கள் மூவருமே விசைப்படகு மீனவர்கள். இந்நிலையில் 3 பேரும் நேற்றுமுன்தினம் நைட் ஷோ சினிமாவுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அற்புதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருப்பதை கண்டனர். அந்த நபருக்கு 50 வயதிருக்கும் என கூறப்படுகிறது.

3 பேரும் அந்நபரை எழுப்பினர். படகை விட்டு வெளியே வருமாறு சொன்னார்கள். ஆனால் அவர் மறுத்து, படகிலேயே படுத்து கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் யார் என்ன என்ற விவரம் கேட்டனர். ஆனால் அந்த நபர் போதையில் இருந்ததால், சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற 3 பேரும் அந்நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கட்டையை எடுத்து அந்நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமுற்ற அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, படுகொலை செய்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications