ஆம்பூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயம்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் கடத்தப்பட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் கீழ்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (62). இவரது மகன் மற்றும் மகள் வழி பேரன்கள் அஜித்குமார் (17), தினேஷ்குமார் (13), தேவராஜ் (13). மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஜித்குமார் 11ம் வகுப்பும், தேவராஜ் 9ம் வகுப்பும், அதே பகுதியில் உள்ள தாகூர் நேஷனல் அரசு நிதியுதவி பள்ளியில் தினேஷ்குமார் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் வீடு அருகருகே இருப்பதால் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவது வழக்கம். கடந்த 15ம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் 3 பேரும் மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பள்ளி முடிந்ததும் 3 பேரும் ஒன்றாக வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர், அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குடியாத்தம் நோக்கிச் சென்றதாக பார்த்தவர்கள் கூறினர். இதனால், மாணவர்கள் 3 பேரும் கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் மாதவன் நேற்று காலை புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அவர்களாக எங்காயாவது சென்றுவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரக்கோணம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட நிலையில், ஆம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் காணாமல்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications