பாமக நிறுவனர் ராமதாசின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 பேர் படுகாயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பாமக நிறுவனர் ராமதாசின் பாதுகாப்பு வாகனம் மோதிய மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து புதுச்சேரியில் நடந்த திருமணத்துக்கு இரவு காரில் புறப்பட்டார். இவருடைய காருக்கு பின்னால் பாதுகாப்பு போலீசாரின் வாகனம் சென்றது.

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் காற்றாம்பாக்கம் அருகே சென்றபோது, திடீரென ஒரு இரு சக்கர வாகனம் மீது பாதுகாப்பு போலீசாரின் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையோரம் நின்ற 4 பேர் மீதும் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
.இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் உடனடியாக 108 வாகனம் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து கிடைத்த தகவலையடுத்து திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள சின்னகாட்ராம்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிளியனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலான அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications