திருச்செந்தூர் தெய்வானைக்கு குஷி.. இரும்பு கேட்டை திறந்ததுமே.. ஆமா, அதென்ன வெள்ளையாக யானை காலில்?

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலின் தெய்வானை யானை, பாகனின் மறைவுக்கு பிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.. இது தொடர்பாக யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் தெய்வானை என்ற 26 வயது யானை, கடந்த 18ம் தேதி யானைப் பாகன் உதயகுமார் (45) மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் மூர்க்கத்தனமாக தாக்கியது. இதில் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

tiruchendur elephant deivani thiruchendur

கம்பி வலை: இதையடுத்து, பாகன் உதயகுமார் உயிரிழந்ததால் யானை தெய்வானை சோகத்துடன் காணப்பட்டது. அதற்கு பிறகு, யானை மீது தண்ணீர் பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் கட்டிப்போடப்பட்டது.. இரும்பு கம்பி அறையை சுற்றி பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து, யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கும் பக்தர்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் சென்றிருந்தபோது, கோயில் யானை தெய்வானையை நேரில் ஆய்வு செய்தார்.. அவர் யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் யானையை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் கால்நடை வனத்துறை மருத்துவர்கள் மனோகரன், ஆண்டனியினிடம் யானையின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இயல்பு நிலை: அப்போது வனத்துறை, கால்நடை மருத்துவர்கள், "யானை இயல்பு நிலையில்தான் இருக்கிறது. உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழக்கம்போல் சாப்பிடுகிறது. 7 நாட்கள் கண்காணிப்பு முடிந்து விட்டது. இன்னும் 14 நாட்கள் அதாவது மொத்தம் 21 நாள் கண்காணிப்பு தேவை. மேலும் பக்தர்கள் அதிகம் வரும் இடம் என்பதால் யானை பாகன்கள் யானை அருகே இருக்க வேண்டும்" என்று அமைச்சரிடம் கூறினார்கள்.

இதற்கு பிறகு, யானை தெய்வானையை பார்வையிட்ட அமைச்சர், அதற்கு கரும்பு சாப்பிட தந்தார்.. தெய்வானையும் கரும்பை ருசித்து சாப்பிட்டது. முன்னதாக, அமைச்சர் செல்வதற்காக, பூட்டப்பட்டிருந்த இரும்பு கேட் திறக்கப்பட்டது. அந்த இரும்பு கதவை திறந்ததுமே தெய்வானை உற்சாகமாக நடனமாட துவங்கியது.. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்துவிட்டார்கள்.

மகிழ்ச்சி:
ஒரு வார காலத்துக்கு பிறகு, தெய்வானை இயல்பு நிலைக்கு வந்துள்ளது, பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இதனிடையே, யானையின் காலில் ஏதோ தொற்று போல காணப்படுவதாக, இணையத்தில் சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.. தெய்வானையின் கால் மற்றும் முட்டிப் பகுதிகளில் பூஞ்சை மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்பு உள்ளதாகவும், வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக இருக்க என்ன காரணம்? யானைக்கு உண்மையிலேயே தொற்று ஏற்பட்டுள்ளதா? பாகனை இழந்த சோகம் இன்னும் நீங்கவில்லையா? யானையை கொண்டுபோய் காட்டில் விட்டுவிடுங்கள்" என்றெல்லாம் இணையவாசிகள் சிலர் அந்த வீடியோவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+