திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு.. கொண்டாடும் 6 ஆயிரம் குடும்பங்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். உடன்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இது பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.
பல இடங்களில் ஒரு பொருள் தயாரிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட மண்ணில் தயாரிக்கப்படுவதற்கே மதிப்பு மக்களிடையே இருக்கிறது. எத்தனையோ இடங்களில் அல்வா தயாரிக்கப்பட்டாலும் திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் அல்வாவே உலகஅளவில் பேமஸ் ஆக உள்ளது. காரணம் அந்த மண் தான். அங்குள்ள தாமிர பரணி தண்ணீரே காரணம்.

இதேபோல் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லிகைப்பூ, காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, ஊத்துக்குளி நெய், மைசூர் பாகு, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், தூத்துக்குடி மக்ரூன், புதுக்கோட்டை முட்டை மசால், விருது நகர் புரோட்டோ என ஒவ்வொரு மண்ணுக்கும் சிறப்பு உள்ளது. அந்த மண்ணில் விளைந்த அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு என்று தனிமவுசு உள்ளது.
இப்படிப்பட்ட மண் சார்ந்த பொருட்களுக்கு புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) மத்திய அரசால் வழங்கப்பபடுகிறது. இதன்படி குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அதாவது எப்படி என்றால் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன்படுத்த கிடையாது.

இப்படி தமிழ்நாட்டில் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. உதாரணமாக அரும்பாவூர் மர வேலைப்பாடுகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஆத்தூர் வெற்றிலை, ஆரணிப் பட்டு, இராமநாதபுரம் குண்டு மிளகாய், இலவம்பாடி முள்கத்திரி, ஈத்தாமொழி நெட்டை தென்னை, ஈரோடு மஞ்சள், உடன்குடி கருப்பட்டி, ஊட்டி வர்க்கி, ஊத்துக்குளி வெண்ணெய், கம்பம் பன்னீர் திராட்சை, கன்னியாகுமரி மாறாமலை கிராம்பு, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் , காஞ்சிபுரம் பட்டு, காரைக்குடி ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள், காரைக்குடி கண்டாங்கி சேலை, காரைக்குடி காரைவீடு, காரைக்குடி கொட்டான், கொடைக்கானல் மலைப்பூண்டு, கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி, நாகர்கோயில் கோயில் நகை, கோவில்பட்டி கடலை மிட்டாய், கோவை கோரா பருத்திப் புடவை, சிறுமலை மலை வாழைப்பழம், சீரக சம்பா அரிசி, சுவாமிமலை வெண்கலப் படிமங்கள், சேலத்துப் பட்டு, சேலம் சுங்கடி, சேலம் ஜவ்வரிசி, சோழவந்தான் வெற்றிலை, தஞ்சாவூர் ஓவியத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, தஞ்சாவூர் வீணை, திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள், தோடா பூந்தையல், நகமம் காட்டன் சேலை, நரசிங்கம்பேட்டை நாகசுரம், நாச்சியார் கோயில் விளக்கு, பத்தமடை பாய், பவானி ஜமக்காளம், பழனி பஞ்சாமிர்தம், மகாபலிபுரம் கற்சிற்பம், மணப்பாறை முறுக்கு, மதுரை சுங்குடி சேலை, மயிலாடி கல் சிற்பம், மயிலாடுதுறை வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ராமநாதபுரம் குண்டு மிளகாய், வாணியம்பாடி பிரியாணி, விருதுநகர் புரோட்டா, விருப்பாச்சி வாழை, வேலூர் முள்ளு கத்தரிக்காய், ஜடாரி நாமக்கட்டி ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறையீடு கிடைத்து.

இதில் மணப்பாறை முறுக்கு, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் அண்மையில் தான் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். உடன்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள 7 கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு இது பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. பனை தான் அங்கு மக்களின் தொழில் , வாழ்வாதாரமாக உள்ளது. இந்த அறிவிப்பு உண்மையில் நல்ல பலனை தரும் என்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications