Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'திருப்பதி போல் திருச்செந்தூர்'.. ஹெச்சிஎல் போட்ட மாஸ்டர் பிளான்.. அற்புதமாய் மிளிரப்போகும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் முருகன் கோயில் மாறப்போகிறது. புதுப்பொலிவுடன் கோயில் மிளிரப்போகிறது. இதற்கான ஹெச்சிஎல் நிறுவனம் செய்து வரும் பணிகளை பற்றி இப்போது பார்ப்போம்.

கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு சுப்பிரமணிய சுவாமியாக வீற்றிருக்கும் முருகபெருமானுக்கு கடந்த 2009ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதற்கான திருப்பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tiruchendur will become like Thirupati : master plan laid by HCL; The temple is getting renewed

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் வேகமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து, எச்.சி.எல். நிறுவனம் 300 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் மெகா மேம்பாட்டு திட்டப் பணிகளை செய்து வருகிறது.

திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இதனால் திருப்பதி கோயிலுக்கு இணையாக க்யூ கம்ப்ளக்ஸ் (Queue complex) ஒன்றுகட்டி, அதன் வழியாக படிப்படியாக பக்தர்களை அனுப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது தவிர கோயில் நிதியில் ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது ராஜகோபுரத்தில் சாரம் கட்டி, அதில் உள்ள சிதிலமடைந்த சிலைகள் சீரமைக்கப்படுகிறது.அதேபோல் ராஜகோபுர மண்டபம், திருக்கல்யாணம் நடைபெறும் திருப்பணி மண்டபமும், புனரமைக்கப்படுகிறது. ராஜகோபுர வாசலில் உள்ள முக மண்டபம்,திருப்பணி மண்டபத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான கற்கள் அகற்றப்பட்டு வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tiruchendur will become like Thirupati : master plan laid by HCL; The temple is getting renewed

இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பேசுகையில், திருப்பணி மண்டபம் மற்றும் முகமண்டபத்தில் தரையில் பதிக்கப்பட்டிருந்த, கோட்டா மற்றும் கடப்பா கற்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக கருங்கல் பதிக்கப்படுகிறது. பழமை மாறாமல் தான் பணிகள் நடக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கும்பாபிஷேகத்திற்கு கோயில் உள் வெளிபிரகாரம், ராஜகோபுரம், திருப்பணி மண்டபம் ஆகியவை 16.06 கோடி செலவில் ஆகம விதிகளின் படி தொல்லியல் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி திருப்பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+