குடி போதையில் சண்டை போட்ட கணவரை இரும்புத்தடியால் அடித்துக் கொன்ற மனைவி கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடிபோதையில் வந்து சண்டையிட்ட கணவரை இரும்புத்தடியால் அடித்துக் கொன்ற மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன், 40; இவரது மனைவி செல்வி, 40. இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஸ்ரீமதி என்ற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், ராஜ்மோகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, சபரி, 9, கரிகாலன், 5, என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவருக்கு பிறந்து தற்போது, 19 வயது உள்ள பெண் குழந்தையுடன் சேர்த்து, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

ராஜ்மோகன் கோவையில் ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு விடுமுறை சொல்லி விட்டு மனைவி குழந்தைகளை பார்க்க, திருச்செங்கோடு வந்த ராஜ்மோகன் தொடர்ந்து குடித்து விட்டு போதையில் இருந்துள்ளார்.
மனைவி செல்வியின் நடத்தையை சந்தேகப்பட்டு சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்த ராஜமோகன், கடந்த ஞாயிறு அன்று குடிபோதையில் வந்து மீண்டும் செல்வியை சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். மேலும், வாக்குவாதத்தின் போது செல்வியை இரும்புக் கம்பியால் தாக்க முயன்றுள்ளார்.
அப்போது தன்னை காத்துக்கொள்ள எண்ணிய செல்வி ராஜமோகனிடம் இருந்த இரும்புக் கம்பியை பிடுங்கி ராஜமொகனை தாக்கியுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த ராஜமோகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜமோகனின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக செல்வி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, சேலம் மத்திய பெண்கள் சிறையில் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications