ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார்.

தமிழக கவர்னரை இன்று காலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசினார். கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த வெங்கய்ய நாயுடு நட்பு நிமித்தமாகவே கவர்னரை சந்தித்து பேசியதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்று கவர்னரை பார்த்து விட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications