நெல்லை: கூட்டத்தில் மேயரை திட்டிய துணைமேயர்: அழுது கொண்டே வெளியேறினார்
திருநெல்வேலி: நெல்லையில் மேயர் துணைமேயர் இடையே மோதல் வலுத்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த போது மேயர் புவனேஸ்வரியை துணைமேயர் கணேசன் திட்டியதால் அவர் அழுதுகொண்டே வெளியேறியதாக கூறப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் புவனேஸ்வரி(அதிமுக). துணை மேயராக கணேசன் (அதிமுக) இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அழைத்து சமரச பேச்சு நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்தது.
இன்று அதிமுக மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் தலைமையில் நெல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். சமரச கூட்டத்திலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துணைமேயர் கணேசன், மேயர் புவனேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறுகிறது. இதனால் மேயர் புவனேஸ்வரி அழுதபடியே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேயர், துணைமேயர் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால் நெல்லையில் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications