நெல்லையில் சுதந்திர தினத்தில் 'கால் யுவர் கலெக்டர்' திட்டம் தொடக்கம் - மக்கள் வரவேற்பு
சுதந்திர தினத்தன்று நெல்லை ஆட்சியர் தொடங்கியுள்ள 'கால் யுவர் கலெக்டர்' திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பொது மக்கள் பிரச்சனை குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கால் யுவர் கலெக்டர் என்ற புதிய திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
நெல்லை கலெக்டராக பொறுப்பு ஏற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் 'அன்பு சுவர்' என்ற திட்டத்தை ஏற்கெனவே தொடங்கி வைத்தார். மேலும் தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்தும் வகையில் தனியார், அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து 'க்ளீன் தாமிரபரணி' என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகள், பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக 'கால் யுவர் கலெக்டர்' என்ற திட்டத்தை பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அதற்கான 9786566111 என்ற தொடர்பு எண்ணையும் கலெக்டர் அறிமுகப்படுத்தினார். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரமும் புகார் அளிக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல் மூலமும் கலெக்டரின் பார்வைக்கு பிரச்சனைகளை கொண்டு வரலாம். இந்தத் திட்டம் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications