குஷ்பு வருகைக்கு நெல்லையில் எதிர்ப்பு- காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு
நெல்லையில் குஷ்வு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

திருநெல்வேலி: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வருகைக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியையும்,கோஷ்டி மோதலையும் பிரிக்க முடியாது. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் கட்சி நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதலுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

தமிழக அரசியல் சூடு பிடித்து வரும் நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை முக்கூடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக குஷ்பு நெல்லை சென்றுள்ளார்.

இதற்காக அவர் நெல்லை மாவட்டம் வரும் தகவல் முறையாக நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை என கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு நிர்வாகிகள் பூட்டு போட்டனர்
குஷ்புவின் வருகை தொடர்பான போஸ்டரில் ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர் இல்லாததால் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நெல்லையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கும் அவர்கள் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைப்பவர்கள்தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக கூறினார். தான் கட்சியை வளர்க்க நினைப்பதாகவும் தெரிவித்தார். பாஜகவின் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications