Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்டிகை நாளில் புத்தாடையும் நம்ம ஊர் பலகாரமும் ஒரு சேர ஆன்லைனில்......

Subscribe to Oneindia Tamil

தமிழர்களுக்கு புத்தாடையும் பலகாரமும் இல்லாத பண்டிகை பண்டிகையாகவே தெரியாது. இது எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பண்டிகை நாளில் புத்தாடையும் பலகாரமும் எப்படி வந்தது

நம் தமிழர் பண்டிகை கொண்டாட்டம் எப்பொழுதும் இயற்கையை சார்ந்தே கொண்டாடப்பட்டது. எடுத்துகாட்டாக நம் முக்கிய பண்டிகையான தை பொங்கலையே எடுத்து கொள்வோமே. நம் விவசாய முறையானது ஆடியிலே விதை விதைத்து ஆவணி சாரலில் துளிர் விட்டு புரட்டாசிக் காற்றில் வலிமை பெற்று ஐப்பசி மழையில் செடி வளர்ந்து பூ பூத்து மார்கழி பனியில் காய் செழித்து கனிந்து விவசாயிகளின் வாழ்க்கையை செழிக்கிறது. அச்செழுமையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கே தையில் பொங்கல் பண்டிகை.

" களத்தில் உழைத்து

கனியை பறித்து

உளத்தில் மகிழ்வை

உவகை கொண்டு

கருத்தாய் வாழ்வை

அமைத்து கொடுத்த

இறைக்கு நன்றியாம்!

இயற்கைக்கு நன்றியாம்! "

Tirunelveli Halwa | Buy world famousTirunelveli halwa online

​அறுவைடையில் ஆனந்தம் கொண்ட நம் மக்கள் அதன் மூலம் வரும் வருமானத்தில், தானும் தன்னை சார்ந்தோரும் சந்தோசமாக இருப்பதற்காக புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கல் இட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவ்வாறு காரணங்களோடு ஆரம்பிக்கப்பட்ட பண்டிகை கலாச்சார மாற்றத்தாலும் மக்களின் மேம்பட்ட வருமானத்தாலும் அனைத்து பண்டிகைளையுமே நாம் சிறப்போடு கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இப்பொழுது நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் புத்தாடையும், பலகாரங்களும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

நாவிற்க்கு பலகாரம் மனதிற்கு புத்தாடை ..............

என்று மக்களுக்கு பிடித்து போக இதை மற்ற அனைத்து பண்டிகைகளிலும் தொடர ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் பொங்கலுக்கு மட்டுமே புத்தாடை அணிந்த மனிதன் இன்று தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, இன்னும் பல பண்டிகளையும், பிறந்த தினம், திருமண நாள், இன்னும் பல வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் இனிப்புகள், பலகாரங்கள், ருசித்து புத்தாடைகள் அணிந்து கொண்டாடும் பண்டிகையையே பண்டிகை என்றும் அளவிற்கு உள்ளது. புத்தாடையும் பலகாரமும் இல்லாத பண்டிகை பண்டிகையாகவே இருக்காது. குறிப்பாக பெண்கள் புத்தாடை இல்லை என்றால் அவர்களால் இதை ஏற்று கொள்ளவே இயலாது.

காலம் மாற்றத்தால் பண்டிகை கொண்டாட்டமும் மாறியது

ஆரம்பகாலகட்டத்தில் விடிய விடிய பலகாரம் தயார் செய்து குடும்பத்தோடு புத்தாடை அணிந்து பலகாரங்களை ருசித்தும், அருகில் உள்ள வீடுகளில் பகிர்ந்தும் கொண்டாடி வந்தோம்.

Tirunelveli Halwa | Buy world famousTirunelveli halwa online

​அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிராமத்தானாக இருந்த மனிதன் நகர மனிதனாக மாற தொடங்கினான். இப்படி மாறும் பொழுது அவன் அவன் வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. மிகுதியான வருமானத்தாலும் இயந்திர வாழ்க்கையாலும் பல நாட்கள் கொண்டாடிய பண்டிகை சில நாட்களாக மாறியது. விடிய விடிய பலகாரம் செய்யும் பழக்கம் கடைகளிலே வாங்கி ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கைத்தரியிலே நெய்த துணிகள் இயந்திரத்தில் தயாரித்த துணிகளாய் மாறியது.

இன்று அதற்கும் ஒரு படி மேலே போய் பல வித பொருள்களும் வீட்டிற்கே வந்து சேரும் வண்ணம் ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துவிட்டது. ஆம் இன்று பண்டிகை என்பதில் ஆன்லைன் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் நேடிவ்கிருஷ்.காம் என்ற இணையதளம் ருசியான தரமான பலவிதமான இனிப்புகள், காரங்கள், பலகாரங்கள், மற்றும் துணிகளை ஒரு சேர ஆன்லைனில் விற்கிறது. ஒரே இடத்தில இரண்டையுமே வாங்குங்கள் பண்டிகையை சிறப்பாய் கொண்டாடுங்கள்.

Tirunelveli Halwa | Buy world famousTirunelveli halwa online

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது

நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம்

ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..

Tirunelveli Halwa | Buy world famousTirunelveli halwa online

​நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+