கனமழை... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கனமழை கொட்டிவருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. மழை காரணமாக சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி வேட்டிஞ்சிகாடுவை சேர்ந்த தனியாரின் கோழிப்பண்ணைக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதில் அந்த பண்ணையில் இருந்த 6 ஆயிரம் குஞ்சுகளில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.

ரயில் தண்டவாளம் அரிப்பு

ரயில் தண்டவாளம் அரிப்பு

வெண்டிபாளையம் பகுதியில் திடீரென தோன்றிய வெள்ளம் அங்குள்ள ரயில் தண்டவாளம் வழியாக காலிங்கராயன் வாய்க்காலுக்குள் சென்றது. மழை நீர் ஓடியதால் தண்டவாளம் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரயில்களை இயக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் சிக்னல் கிடைக்காமல் சென்னையில் இருந்து வரவேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.

5 மணிநேரம் தாமதம்

5 மணிநேரம் தாமதம்

அதிகாலை 5 மணி அளவில் மண் அரிப்பு சரி செய்யப்பட்டதை அடுத்து அந்த வழியாக அனைத்து ரயில்களும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இந்த மண் அரிப்பு காரணமாக ஈரோடு வரும் ரயில்கள் நேற்று 5 மணி நேரத்துக்கும் அதிகமாக தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டிவருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் இருப்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+