திருப்பத்தூர் அரசு அதிகாரியை.. வலையில் விழவைத்த வேலைக்கார பெண்.. கனவிலும் இப்படி நடக்காதே.. அடபாவமே
திருப்பத்தூர்: அரசு அதிகாரி என்றும் பாராமல் 2 பெண்கள் செய்த காரியம், திருப்பத்தூரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இது தொடர்பாக 3 பேர் கைதாகி உள்ள நிலையில், அந்த 3 பேருமே வேலூர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது திருப்பத்தூரில்?
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. சிலசமயங்களில் ஆண் குழந்தைகளையும் பெண்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய துயரமான நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது.. கடைசியில், ஆண், பெண் இரு தரப்புமே போக்சோவில் கைதாகும் அவலம் நம் தமிழகத்தில் அதிகமாகி கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகி, அப்பாவி பெண்களை அழிக்கும் அபாயமும் நடக்கிறது. அதேபோல, சில அருவெறுப்பான செயல்களிலும் பெண்கள் ஈடுபடுவது கலக்கத்தை தந்து வருகிறது.

திருவண்ணாமலை கொடுமை
கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழனியம்மாள் என்ற 47 வயது பெண், 18 வயது பெண்ணுடன் சேர்ந்து, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், சிறுவனையும் தனித்தனியாக ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள்..பிறகு, இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ஒரு பவுன் நகை வேண்டும் என்று, 2 பெண்களும் சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள்..
அத்துடன் அந்த ஆபாச படத்தை சிறுமியின் அக்காவிற்கும், உறவினர் பெண்ணுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.. அப்போதுதான் சிறுமியின் பெற்றோருக்கே இந்த விவகாரம் தெரிந்து, தண்டராம்பட்டு மகளிர் போலீசுக்கு ஓடினார்கள். இறுதியில், பழனியம்மாளும், அவரது 18 வயது தோழியும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவருபவர் மாதேஸ்வரன்.,.. இவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை.
வீட்டுக்கு வந்த நளினி
அதனால், தன்னுடைய அம்மாவை பராமரிப்பதற்காக, "சன் லைட் ஹோம் கேர்" என்ற நிறுவனத்தில் பணியாற்றும் நளினி என்பவரை வேலைக்கு வரவழைத்துள்ளார். இதனால் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது..
இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் நளினி.. இதற்காக மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து கொண்டு, "சன் லைட் ஹோம் கேர்" நடத்தும் செல்வி என்பவருக்கு அனுப்பி வைத்தார்..
செல்வியின் மிரட்டல்கள்
உடனே செல்வி, அந்த நிர்வாண வீடியோவை, மகேந்திரனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.. இதனால் பயந்துபோன மகேந்திரன், முதல்கட்டமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்..
ஆனால், மிச்ச பணத்தையும் உடனே தந்தாக வேண்டும் என்று செல்வி தொந்தரவு செய்தாராம்.. தன்னிடம் பணம் இல்லை என்று மாதேஸ்வரன் சொன்னதால், ஆத்திரமடைந்த செல்வி, தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்பூரை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை, மகேந்திரன் வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வர சொல்லி உள்ளார்.
பயந்து போன அரசு அதிகாரி
பணம் வாங்குவதற்கு, வீட்டுக்கே ஆள் வந்து நிற்பதை கண்டு பயந்துபோன மாதேஸ்வரன், போலீசுக்கு ஓடினார்.. அப்போதுதான், நளினி, செல்வி 2 பெண்களும் சேர்ந்து பிளான் போட்டு, மாதேஸ்வரனிடம் பணம் பறித்தது தெரியவந்தது.. இதையடுத்து விமல்ராஜ் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அரசு அதிகாரியான தலைமை அஞ்சலகத்தின் கண்காணிப்பாளரையே நிர்வாண வீடியோ எடுத்து 2 பெண்கள் மிரட்டிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications