திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: ஹிந்து பரிவார் இயக்கங்கள் சார்பில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டி கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் பாடப்பட்டது. இன்றைய தினம் சூரசம்ஹார நாளில் இந்த விசேஷ வேண்டுதல் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது தமிழக அரசு. இதை வலியுறுத்தி அதற்கான நடவடிகைகளில் அரசு இறங்க இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும் வகையிலும் ஹிந்து கோயில்கள் மற்றும் ஹிந்து பரிவார் இயக்கங்கள் சார்பில் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயில் மண்டபத்தில் வைத்து கந்தர் சஷ்டி பாராயணம் பாடப்பட்டது.

tirupparankundram deepa thoon

ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ராஜாமணி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் இந்த நிகழ்சியில் இந்து முன்னணி ,சமய வகுப்பு , விஷ்வ ஹிந்து பரிஷத் ,பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . மேலும் குழித்துறை ஸ்ரீ பால பத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டி கந்தர் சஷ்டி பாராயணம் பாடப்பட்டது.

இது போன்று மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி
கந்தர் சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. திருக்கார்த்திகை தீபம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தீபத் தூணில் விளக்கு ஏற்றாமல் பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத் தூணில் தீபமேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+