திருப்பூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - பட்டப்பகலில் மர்மநபர்கள் வெறிச்செயல்
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: முன் விரோதம் காரணமாக இளைஞரை நடு ரோட்டில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் தன் சகோதரர் வெங்கடேசனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதேபகுதியை சேர்ந்த ஒருவரின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில் நேற்று வெங்கடேசன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் வைத்து கத்தி, அரிவாள் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சராமரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெங்கடேசனை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டப்பகலில் நடு ரோட்டில் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications