3 ஆவது மனைவி மகளுடன் “பைட்” - 2 ஆவது மனைவியின் மகனைக் கொன்ற தந்தை!
திருப்பூர்: திருப்பூரில் 3 ஆவது மனைவியின் மகளிடம் சண்டை போட்ட 2 ஆவது மனைவியின் மகனை கொலை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகிலுள்ள கருமாபாளையம், மூலக்காதடுத் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் 2 ஆவது மனைவியின் மகன் கிருஷ்ணமூர்த்தி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு, இவரது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்து சாலையில் உள்ள ஓலை கொட்டகையில் தூங்கச் சென்றவர் காலையில், பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் சேவூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சுப்பரமணியிடமும் அவரது மூன்று மனைவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுப்பிரமணியம் சேவூர் கிராம நிர்வாக அலுவலர் சிவாஜியிடம் நேற்று சரணடைந்தார். பின், சேவூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசாரிடம் சுப்பிரமணியம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், எனது 2 ஆவது மனைவியின் மகன் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 22 ஆம் தேதி வஞ்சிபாளையம் சென்றபோது சுப்ரமணியின் மூன்றாவது மனைவியின் மகள் கார்த்திகாவிடம் சண்டையிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சுப்ரமணி மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதால், தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த சுப்ரமணி, "கிருஷ்ணமூர்த்தி தோட்டத்துக்கு சாலைக்கு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு அங்கு சென்ற நான் தூங்கிக் கொண்டிருந்த எனது மகனை மண்வெட்டியால் தலையில் பலமாக அடித்தேன். மண்டை உடைந்த அடுத்த சில நிமிடங்களில் கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டான்" என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சுப்ரமணியை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications