புத்தாண்டில் குடித்துக் குவித்த குடிகாரர்களால்... ரூ.164 கோடி மது விற்பனை!
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
அதாவது டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மட்டும் ரூ. 164 கோடி அளவுக்கு தமிழக மதுக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 22 கோடி அதிகம் ஆகும்..

6800 கடைகள்
தமிழக்த்தில் மொத்தம் 6,800 க்கு மேற்பட்ட மதுபான கடைகளும், 21 எலைட் கடைகளும் உள்ளன.

வழக்கமான நாட்களில்
மதுபான கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 கோடிக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமை உள்ளிட்ட இதர விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 80 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெறும்.

பண்டிகை நாட்களில் அமோகம்
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் மது பிரியர்கள் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.

போட்டி போட்டு சரக்கு விற்ற மாவட்டங்கள்
இந்த வருடம் ஆங்கிலப் புத்தாண்டு மது விற்பனையில், தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டகளிலிலும் செம போட்டி ஏற்பட்டதாம்.

முதலிடத்தைப் பிடித்தி திருப்பூர்
ஆங்கிலப் புத்தாண்டு விற்பனையில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை தட்டிச் சென்றது.

2வது இடத்தில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் 2 வது இடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

முதலிடத்தை இழந்தது சென்னை
கடந்த ஆண்டு சென்னை மாவட்டம் முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னத்தச் சொல்ல!
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications