மணக்க மறுத்த இளம் பெண்.. தோசைக் கரண்டியால் சூடு வைத்த காட்டுமிராண்டி வாலிபர்!
திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் முகத்திலும், கைகளிலும் தோசைக் கரண்டியால் சூடு போட்ட வாலிபரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் திருமணம் செய்ய மறுத்த உறவுக்காரப் பெண்ணின் முகத்தில் தோசைக் கரண்டியைக் காய வைத்து சூடு போட்ட முரட்டு வாலிபரை போலீஸார் கைது சதெய்துள்ளனர். அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. 21 வயதான இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரர் பத்மநாபன். 23 வயதான இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும் உறவு என்பதால் காதல் மலர்ந்தது. தீவிரமாக காதலித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சண்முகப்பிரியா வீட்டுக்கு வந்துள்ளார் பத்மநாபன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியுள்ளார். ஆனால் சண்முகப் பிரியா மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பத்மநாபன், சமையலறைக்குப் போனார். அங்கு தோசைக் கரண்டியை எடுத்து சுட வைத்து அதை எடுத்து சண்முகப் பிரியாவின் முகத்திலும், கைககளிலும் சூடு போட்டுள்ளார். வலியால் அலறித் துடித்த சண்முகப் பிரியாவை அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சண்முகப் பிரியாவின் தந்தை சக்திவேல் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பத்மநாபனை போலீஸார் கைது செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications