ஸ்டைலாக வந்த மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைகள் ... மாணவி தற்கொலை முயற்சி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மற்ற மாணவர்களின் முன்னிலையில், மாணவியின் தலைமுடியை வெட்டியதாக 2 பள்ளி ஆசிரியைகளை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள கருத்துவாம்பாடியை சேர்ந்த பிரேம்நாத் என்பவரின் 14 வயது மகள் ஸ்ரீநிதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்ரீநிதி நெற்றியின் முன்பக்கம் சிறிது கூந்தலை விட்டு, அதில் கிளிப் மாட்டி பள்ளிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை அவரது வகுப்பு ஆசிரியை கண்டித்துள்ளார். ஆனபோதும் தொடர்ந்து அதே ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு சென்றுள்ளார் ஸ்ரீநிதி.

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் சக மாணவ - மாணவிகளின் முன்னிலையில், ஸ்ரீநிதியின் தலையின் முன்பக்கத்தில் உள்ள முடியை கத்திரியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
சக மாணவ-மாணவிகள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநிதி பள்ளியில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அப்போது அவரது தந்தை பிரேம்நாத் காலையில் பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்பதாக கூறி ஸ்ரீநிதியை சமாதானப்படுத்தி உள்ளார்.
எனினும் சமாதானம் அடையாத ஸ்ரீநிதி இரவு தூங்கும் போது எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கிய நிலையில் ஸ்ரீந்தியை மீட்ட அவரது பெற்றோர், அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மேலும், இது தொடர்பாக ஸ்ரீநிதி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியைகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார். அதே போல் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் கூறியதாவது:-
பள்ளி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக மாணவி, அவரது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினேன். இது தொடர்பான அறிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு அனுப்பி உள்ளேன்.
மாணவியின் தற்கொலை முயற்சி காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் 2 பேரையும் பணி நீக்கம் செய்திருப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனர் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications