திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: நவ.17ல் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் வரும் 8ஆம் தேதி கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த தீபத்தின் கடைசி நாளான 17ஆம் தேதி அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கொடியேற்றம் தொடங்கி மகாதீபம் வரை பக்கர்கள் கூட்டம் அலைமோதும். மகாதீப தினத்தன்று கிரிவலம், மலையேற்றம் என லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான விழா வரும் 8ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி டி.ஐ.ஜி. முருகன் தலைமையில் உயர் போலீசார் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன் தலைமையில், எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 68 உயர் போலீசார் அண்ணாமலையார் மலையின் மீது ஆய்வு பணி மேற்கொண்டனர்.
அப்போது, மகா தீபத்தின் போது வரக்கூடிய பக்தர்களின் கூட்டம், அவர்களுக்கான தண்ணீர் வசதி, பாதுகாப்பு வசதி மற்றும் போலீஸ் பூத்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு பணியை முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, திருவண்ணாமலை எஸ்.பி. முத்தரசி கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, எஸ்.பி. முத்தரசியை மீட்டு வந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications