திருடியதை விட கூடுதல் நகைகளை மஞ்சள் பையில் போட்டு ரிட்டர்ன் செய்த திருடன்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து திருடிய நகைகளை விட கூடுதலாக மஞ்சள் பையில் போட்டு, திருடிய நபரே உரியவர் வீட்டு கேட்டில் மாட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கொசமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (52). ஷோபா, பெட் தயாரித்து விற்பனை செய்து வரும் இவரது வீட்டில், கடந்த 2ம் தேதி 120 சவரன் நகைகள் திருடி போனது.

தெரிந்தவர்களே செய்த திருட்டு
சாவி மூலம் பீரோவைத் திறந்து நகைகளைத் திருடியது மூலம் ஆனந்தன் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களே இந்தத் திருட்டை செய்திருக்க வேண்டும் எனப் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஊழியர்களிடம் தீவிர விசாரணை
அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் கடை மற்றும் ஷோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவரது கடையில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தும் வாடகை வாகனங்களின் டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பயந்து போன கார் டிரைவர்
இதற்கிடையே, ஆனந்தன் வீட்டில் நகைகளைத் திருடிய கார் டிரைவர் அப்துல், போலீஸ் விசாரணையால் பயந்து போனார்.

மஞ்சள் பையில் போட்டு
எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவர், திருடிய நகைகளோடு கூடுதலாக 19 சவரன்களைச் சேர்த்து ஒரு மஞ்சப்பையில் மாட்டி ஆனந்தன் வீட்டு நுழைவுக் கேட்டில் இன்று மாட்டிச் சென்றார்.

எக்ஸ்ட்ரா நகை இருக்கே
வாசலில் கிடந்த மர்ம பையில் தங்கள் நகைகளோடு கூடுதலாக நகைகள் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ஆனந்தன் குடும்பத்தார் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.

கைது செய்த போலீஸ்
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கார் டிரைவர் அப்துல் தலைமறைவானது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் மூலம் அப்துலின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

பயந்து போய் கூடுதல் நகையைத் திருப்பித் தந்தார்
போலீசாரின் விசாரணையில் ஆனந்தன் வீட்டில் நகைகளைத் திருடியதை அப்துல் ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரின் விசாரணைக்குப் பயந்து கூடுதலாக நகைகளைத் திருப்பித் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications