மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணையுமா? ஜி.கே.வாசன் பதில்
சென்னை: மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற கேள்விக்கு தன்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகு அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நான்கு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், தேர்தலுக்காக செயல்படும் கூட்டணி என்று அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் அவர்கள் எந்த கட்சிகளுடன் கூட்டணியாக செயல்பட விரும்புகிறார்கள். எந்த கட்சிகள் உடன் கூட்டணியாக செயல்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். த.மா.கா.வை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வாசன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் நிவாரண உதவிகளை அக்கட்சின் தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க வேண்டும். மக்கள் நலக் கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு நான் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். த.மா.கா.வின் தேர்தல் யூகத்தை பொறுத்தவரையில் எனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் முடிந்த பிறகு தெரிவிப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறேன் என்றார்.
அதிமுக உடன் தமாகா இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவினாலும் விஜயகாந்த் உடன் நட்பில் உள்ள ஜி.கே.வாசன், அவருடன் கலந்து ஆலோசித்தே முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. தங்களின் கூட்டணி பற்றிய அறிவிப்பை பிப்ரவரி மாதம்தான் அறிவிப்போம் என்று வாசன் தொடர்ந்து கூறிவருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications