சென்னைக்கு மட்டும் 8 மாவட்ட தலைவர்கள்… அடடே தமாகா (தொண்டர்கள் எத்தனை பேருனு கேக்காதீங்க!)
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு மட்டும் 8 பேரை மாவட்ட தலைவர்களாக நியமித்து யாரும் மனசு புண்படாதவாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் தலைமையிலான அணி பிரிந்த பின்னர் தமாகாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையை 8 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில நிர்வாகிகள் என மொத்தம் 37 பேர் கொண்ட பட்டியலை கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் வெளியிட்டார்

சென்னை மாவட்ட தலைவர்கள்
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவராக சவுந்தர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக ஜி.ஆர். கதிரவன், வடசென்னை தெற்கு மாவட்ட தலைவராக சி.ராஜ்குமார் வடசென்னை கிழக்கு, மாவட்ட தலைவராக பிஜூ சாக்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடசென்னை -தென் சென்னை
வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக அருண்குமார், தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவராக இல.பாஸ்கர், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக கொட்டிவாக்கம் முருகன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இ.சி.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாநில செயலாளர்கள்
த.மா.கா. மாநில செயலாளர்களாக வில்லிவாக்கம் சுரேஷ், ஜி.பி.நம்பி, ஜவகர் பாபு, லீக்மோகன், மகாத்மா சீனிவாசன், அண்ணாநகர் ராம்குமார், சென்னை நந்து, சுரேஷ் பாபு, மயிலை சத்யா, சைதை நாகராஜ், வில்லிவாக்கம் ரவிசந்திரன், தவுலத்கான், அனுராதா அபி, முட்டுக்காடு கிருஷ்ணன்.

இணைச்செயலாளர்கள்
இணை செயலாளர்கள் கல்யாணி, ஏ.டி.சத்யா, மால் மருகன், ஐ.டி.அரசன், பாடி சுந்தரம், ஏ.எஸ்.ஜார்ஜ், கோதண்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொள்ளை பரப்பு செயலாளர்கள்
பிரகாசம், எல்.கே.வெங்கட், சத்திய நாராயணா, கே.டி.எஸ்.ராஜா, முகமது பயாஸ், உன்னி கிருஷ்ணன், மனோகரன்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவராக ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியில் இருக்கும் அனைவருக்கும் பதவி கொடுத்து விட்டாரோ ஜி.கே.வாசன்?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications