முழு அடைப்புக்கு 'நோ' ஆதரவு- திமுகவுக்கு குட்பை! அதிமுக முதுகில்தான் சவாரி- தமாகா திட்டவட்டம்!
தமிழகத்தில் நாளை நடைபெறும் அனைத்து கட்சிப் போராட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என தமாகா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி விவசாயிகள் பிரச்சனைகளை முன்வைத்து நாளை தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஆனால் இப்போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது முதல் திமுக கூட்டணியில் இடம்பெற பகீரத முயற்சிகளை அக்கட்சித் தலைவர் வாசன் மேற்கொண்டார். ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்டு தமாகாவை உள்ளே இழுக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முயற்சித்தார். ஆனால் அப்போது ஆக்டிவ்வாக இருந்த கருணாநிதி மூலமாக இதற்கு கனிமொழி செக் வைத்தார். இதனால் தமாகா கழற்றிவிடப்பட்டது.

திமுகவுக்கு குட்பை
இதன்பின்னர் திமுகவுடனான கூட்டணி முயற்சிகளை தமாகா கைவிட்டது. அண்மையில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அதிமுகவுக்கு ஜிகே வாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது அதிமுக இரு கோஷ்டிகளும் இணைவது தொடரபாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அனைத்து கட்சி பந்த்
இதனிடையே திமுக தலைமையில் அண்மையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

தமாகா ஆதரவு இல்லை
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு வர்த்தகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல்கள் சங்கம் என பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை என பாஜக அறிவித்துள்ளது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில்?
ஏற்கனவே ஒன்றுபட்ட அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது திமுகவுக்கு குட்பை சொல்லி அதிமுகவுடன் கைகோர்க்க க்ரீன் சிக்னல் காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications