தமிழக சட்டசபை தேர்தல்: த.மா.கா. தலைமையில் உதயமாகிறது புதிய கூட்டணி?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு அண்ணா தி.மு.க., தி.மு.க. இல்லாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்றே கூறப்படுகிறது. இதற்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியினரும் வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.

தி.மு.க.வுக்கு செக்
அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தி.மு.க.வை தனிமைப்படுத்தி அதன் தலைமையில் எந்த ஒரு பெரிய கட்சியும் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வருகிறது.

பகீரத முயற்சி
ஆனால் தி.மு.க.வோ, அண்ணா தி.மு.க.வை வீழ்த்த அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஓரணியில் கொண்டுவந்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறது.. இதற்கான கூட்டணி அரசு, கூட்டணி ஆட்சி என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

விடுதலை சிறுத்தைகள்
ஏற்கெனவே தி.மு.க. அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து அந்த அணியில் நீடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. விடுதலை சிறுத்தைகளைப் பொறுத்தவரை கருணாநிதி கொடுத்த மரியாதை, மதிப்பை மு.க.ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் தருவதில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது.. ஸ்ரீரங்கம் சட்டசபை தேர்தல் வேட்பாளர் கருணாநிதி வீட்டில் இருந்த போது திருமாவளவன் சென்ற நிலையிலும் அவருக்கு அறிமுகப்படுத்தி கூட வைக்கவில்லையாம்..

ம.தி.மு.க.
அதேபோல் ம.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கருணாநிதி முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டால் தி.மு.க.வை ஆதரிக்க தயாராக இருக்கிறராம்.. ஆனால் மு.க.ஸ்டாலின் என்றால் நிச்சயம் ஆதரவு இல்லை என்பதுதான் ம.தி.மு.க. நிலைப்பாடாக இருக்கிறது என்கின்றனர்..

வாசன் - யெச்சூரி சந்திப்பு
இந்த நிலையில்தான் சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி திடீரென சந்தித்து பேசினார். வாசன் வீட்டுக்கே போய் யெச்சூரி சந்தித்திருப்பதா இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மெகா கூட்டணி
அதாவது தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் தே.மு.தி.க, இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய ஒரு கூட்டணிய்8ஐ உருவாக்குவோம் என்பதுதான் யெச்சூரியின் திட்டமாம்.. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடன் வாசனுக்கு மிக நெருக்கம் என்பதால் இப்படி ஒரு வியூகமாம்..
ஜி.கே.வாசனும் கிட்டதட்ட இதே சிந்தனையில் இருப்பதால் வரும் வாரங்களில் தமிழக அரசியல் களம் 'கூட்டணி' யூகங்களால் பரபரப்பாகவே இருக்கும் என நம்பலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications