115வது பிறந்தநாள்.. காமராஜர் புகழ் பரப்பும் பிரச்சார வாகன பயணம்: ஜி.கே.வாசன் தொடக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் புகழ் பரப்பும் பிரச்சார வாகனப் பேரணியை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி இன்று தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் காமராஜரின் புகழ் பரப்பும் பிரச்சார வாகனத்தை, அதன் தலைவர் ஜி.கே.வாசன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறுகையில், " வருகிற 15-ம் தேதி காமராஜரின் 115-வது பிறந்த நாள். அதனையொட்டி தமிழகம் முழுவதும் நகரம், கிராமம், வட்டம் என அனைத்து பகுதிகளிலும் த.மா.கா. சார்பில் விழா எடுத்து கொண்டாடப்படும்.

TMC President GK Vasan starts Kamaraj renown Campaign vehicle

சென்னையில் மயிலை மாங்கொல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காமராஜரின் புகழ் பரப்ப செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் காமராஜரின் சாதனைகளை விளக்கி சென்னை முழுவதும் சுற்றி வரும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி, பட்டாசு, தீப்பெட்டி, உணவு பண்டங்களின் விலை ஏறியுள்ளன. தொழில்கள் நலிவடைந்துள்ளன. வணிகர்கள் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய தேர்வு முறை ஏற்புடையதல்ல. நடைமுறை சிக்கல் உள்ளதால் பழைய முறையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+