அதெப்படி சைக்கிளை வாசன் வச்சுக்கலாம்.. த.மா.காவுக்கு த.மு.க. கண்டனம்!
சென்னை: எங்களது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவுடனேயே கட்சி தொடங்கப்பட்டதுமே, எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது சின்னமாக சைக்கிளை அறிவித்துள்ளது மோசடியாகும் என்று தமிழக முன்னேற்ற காங்கிரஸ் நிறுவனத் தலைவரான எஸ். அருள்தாஸ் என்பவர் கூறியுள்ளார்.
13 ஆண்டு காலத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியுள்ளார் வாசன். தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்திய அவர் திருச்சியில் நடந்த கட்சி தொடக்க விழாவில், கட்சியின் சின்னமாக சைக்கிள் இருக்கும் என்றும் அறிவித்தார்.

கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம்தான் இறுதி செய்ய முடியும் என்பது ஒருபுறம் இருக்க, இப்போது இந்த சைக்கிளுக்காக தமாகாவும், தமுகவும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
தமிழக முன்னேற்ற காங்கிரஸ் நிறுவன தலைவர் எஸ்.அருள்தாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக முன்னேற்ற காங்கிரஸ் 2012 மே மாதம் 7-ந்தேதி துவக்கப்பட்டு முறையாக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு, தமிழக மக்களுக்காக எங்கள் பணியினை செய்து கொண்டு இருக்கின்றோம்.
கட்சி துவக்கப்பட்ட நாளிலேயே எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்துள்ளோம். ந்நிலையில் ஜி.கே.வாசனின் புதிய கட்சி துவக்க விழாவில் தங்களது கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னம் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது நாட்டு மக்களையும், அவருடைய கட்சியினரையும் தேர்தல் கமிஷனையும் ஏமாற்றுகின்ற, மோசடி செய்கின்ற செயலாகும்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமலே, சின்னத்தை அறிவித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே வாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications