நாங்கதான் 'ரியல்' காங்கிரஸ்... சொல்கிறார் ஜி.கே. வாசன்
புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையாது எனவும் நாங்கதான் உண்மையான காங்கிரஸ் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமாகாவை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் ஜி.கே.வாசன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை வாசன் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமையின் நம்பிக்கையை இழந்த தலைவர்கள் என்னைப் பற்றி விமர்சித்து வருகின்றனர்.
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டேன். தற்போது தமாகா, காங்கிரஸ் போல செயல்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிக்க முடியாமல் கட்சித் தலைமை திண்டாடி வரும் நிலையில், தமாகாவை விமர்சனம் செய்துதான் காங்கிரஸ் கட்சியின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தை எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்துவது சரியல்ல. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காய்ச்சலால் 5-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறை உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.
விருதுநகர்- திருச்சி பயணிகள் ரயிலை செங்கல்பட்டு வரை நீட்டித்து, அந்த ரயிலுக்கு காமராஜர் பெயர் சூட்டி பகல்நேர விரைவு ரயிலாக இயக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிதிஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு வாசன் கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications