விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து.. குஷ்பு வீட்டை முற்றுகையிட வந்த வீரலட்சுமி!
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகை குஷ்புவைக் கண்டித்து தமிழக முன்னேற்றப்படை அமைப்பினர் அந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தலைமையில் குவிந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்த அமைப்பினருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் மோதல் ஏதும் இல்லை.

அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள குஷ்பு வீட்டை நோக்கி வீரலட்சுமி தலைமையில் அவரது கட்சியினர் திரண்டு வந்தனர்.
ஏற்கனவே இந்த அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது பெரும் பிரச்சனையானதால், குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் குவிந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறிவித்தப்படி போராட்டம் நடத்த வந்த வீரலட்சுமி அமைப்பினரைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications