கலைக்கல்லூரிகளில் தேர்வு மூலமாக பேராசிரியர் நியமனம்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தமிழகத்தில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் நடைபெற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனம் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறுகிறது.

ஆனால் பல்கலைக்கழகங்கள், கலை- அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நேர்காணல் மூலம் மட்டுமே பேராசிரியர்கள் பணி நியமனம் நடைபெறுகிறது.
அவ்வாறு நேர்காணல் நடைபெறும் போது தன்னிச்சையாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை.
சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் பேராசிரியர் நியமனம் நடைபெறும்போது கல்வித் தகுதியை கருத்தில் கொண்டு பணியமர்த்தப்பட வேண்டும்.
கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும்போது திறமையான பேராசிரியர்களை நியமிக்க முடியும். எனவே 2015-16ஆம் கல்வி ஆண்டு வரை உள்ள பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வு நிரப்ப வேண்டும்.
திறமையின் அடிப்படையில், வெளிப்படையான, நம்பகத்தன்மையுடன் பணி நியமனம் வழங்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications