தமிழக சட்டசபை 22ம் தேதி கூடுகிறது?: 2016 - 17 பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முதல்வர் ஜெயலலிதா 6வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த மே மாதம் 25ந்தேதி முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஜூன் 3ம்தேதி சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க சட்டசபை கூடியது. ஜூன் 16ம்தேதி ஆளுநர் உரையுடன் 15வது சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் நிகழ்த்தினார். அதன்பிறகு சட்டசபை 4 நாட்கள் நடைபெற்றது.
இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள். காரசார விவாதங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வ ஜெயலலிதா விரிவாக பதில் அளித்து பேசினார். அதன் பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜூலை 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் மீது விவாதம், துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அமைச்சர்களின் பதிலுரை, புதிய சட்ட திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
சென்னையில் நடைபெற்று வரும், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், மீனவர் பிரச்சினை, பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் சட்ட சபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்படியாக தமிழ் நாட்டில் மது விலக்கை கொண்டு வரும் வகையில் ஏற்கனவே 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. 2வது கட்டமாக 500 அல்லது 1000 மதுக்கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதில் எத்தனை மதுக்கடைகள் 2வது கட்டமாக மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இலவச செல்போன், மானிய விலை இருசக்கர வாகனம் ஆகிய முக்கிய அறிவிப்புகளும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications