சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு இரங்கல்
சென்னை: முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர். சற்குண பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தமிழக பட்ஜெட் கடந்த ஜூலை 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 29ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார்.

இந்த நிலையில், இம்மாதம் 1ம் தேதி முதல் அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம் என்பதால் கடந்த 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று செவ்வாய்கிழமை மீண்டும் கூடியது. சட்டசபை கூடிய உடன் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மறைவுக்க இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய தினம் கைத்தறி மற்றும் துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கு நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
விவாதத்தின் முடிவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். மேலும், தங்கள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications