தேமுதிகவிற்கு மக்கள் ஆதரவு 6% மட்டுமே.. விஜயகாந்த் துப்பியதால் பாதிப்பில்லையாம்
சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களிப்போம் என்று வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.பொது இடங்களில் விஜயகாந்த் செயல்படும் விதங்களால் தே.மு.தி.க. வெற்றி பாதிக்கப்படாது என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வகம், 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 120 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 5,464 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த மக்களில் தே.மு.தி.க.வுக்கு வாக்களிப்போம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் விஜயகாந்த் செயல்படும் விதங்களால் தே.மு.தி.க. வெற்றி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இது ஒரு பிரச்சினையே அல்ல என்று 56.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஆனால் தே.மு.தி.க. வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று 20.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்த எதிர்கட்சியினர் வியூகம் வகுத்து வருகின்றனர். தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜகவும் விஜயகாந்தை இழுக்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் விஜயகாந்திற்கு வெறும் 6% ஆதரவு மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பு வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜநாயகம், இப்போதைய சூழ்நிலையில் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் மக்கள் மனநிலை எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேரில் சென்று மக்கள் கருத்தை அறிந்து கணக்கிட்டுள்ளோம்.
இன்னும் கூட்டணிகள் உறுதியாகவில்லை. கூட்டணிகள் உறுதியாகி தேர்தல் பிரசாரம் தொடங்கிய பிறகு மீண்டும் கருத்து கணிப்பு நடத்துவோம். அப்போது எந்த கட்சி ஆட்சிக்கு வரும், யார் முதல்வராக வர வாய்ப்பு இருக்கிறது, யார் முதல்வராக வர மக்களின் ஆதரவு இருக்கிறது, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறையின் வாக்கு யாருக்கு? என்பது பற்றியெல்லாம் கருத்து கணிப்பு நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications