தேர்தல் கூட்டணி: 8 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்.... அ.தி.மு.க.வின் 'கறார்' பேரம்- கதிகலங்கும் த.மா.கா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் மட்டுமே கொடுக்க அ.தி.மு.க. முன்வந்திருப்பது த.மா.கா.வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களில் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகத்துடன் களமிறங்கியுள்ளது.
இதற்கு ஏதுவாக சில சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைப்பது என்பது அ.தி.மு.க.வின் வியூகம். இதன் முதல் கட்டமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

30 சீட் தாங்க..
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதி ஞானதேசிகனுடன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு 30 இடங்கள் வேண்டும் என்று ஒரே போடாக போட்டார் ஞானதேசிகன்.

5 தான் தர முடியும்
இதனை அசட்டு புன்னகையுடன் ரசித்த நத்தம் விஸ்வநாதனோ, உங்களுக்கு 5 தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா சீட் மட்டும்தான் என 'அம்மா' கூறியுள்ளார் என பதில் தர, ஞானதேசிகன் முகம் இருண்டுபோனாதாம். இதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் இந்த தகவலை நேரில் சொல்லியிருக்கிறார் ஞானதேசிகன்.

8 ப்ளஷ் 1 ராஜ்யசபா சீட்
சில நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஞானதேசிகனை அழைத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிகபட்சமாக 8 தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா சீட் என்ற பார்முலாவுக்கு ஒப்புக் கொண்டால் கூட்டணிக்கு வரலாம் என கறாராக சொல்லியிருக்கிறார். அத்துடன் 8 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டதாம்.

வாசன் ஆறுதல்
30 தொகுதிகள் கேட்டு 8 தானா? என ஞானதேசிகன் ஆதங்கப்பட்டாராம்.. ஆனால் ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் நமக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைப்பதை உறுதி செய்துவிட்டோம்; 8 தொகுதிகளைப் பெற்று கட்சியினரை சமாளித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு ஆறுதல் படலத்தை தொடங்கியுள்ளனராம்.
அதே நேரத்தில் கூட்டணிக்கு வராவிட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் 'மூத்த தலைகள்' சிலர் அ.தி.மு.க.வுக்கு தாவவும் கூடும் என நெருக்கடியும் வாசனுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications