தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு- ஜூன் 3-ல் சபாநாயகர் தேர்தல்
சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் ஜூன் 3-ந் தேதி நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 232 உறுப்பினர்கள் இன்று தொடங்கும் கூட்டத் தொடரில் பதவியேற்கவுள்ளனர். உறுப்பினர்களுக்கு சட்டசபை தாற்காலிக சபாநாயகர் எஸ்.செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பிரமாணம் எடுத்துக் கொள்ள வரும்போது, சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் ஜூன் 3-ந் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
இதன் பின்னர் புதிய சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுவார். இந்தக் கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நடப்பு நிதியாண்டுக்கான தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை வாரியான செலவினங்களுக்கும் சட்டசபையின் ஒப்புதல் பெறப்படும்.












Click it and Unblock the Notifications