தமிழக சட்டசபை கூடியது- கட்டிட விபத்துகளில் உயிரிழந்தோருக்கு இரங்கல்!
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மவுலிவாக்கம், திருவள்ளூர் கட்டிட விபத்துகளில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. சபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்றனர்..

இன்று காலை சபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பூவராகன், அ.மலர்மன்னன், ரா.உமாநாத், ராம.நாராயணன், எஸ்.ராஜு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், அலமாதி கிராமத்தில் சேமிப்பு கிடங்கில் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியவை குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் சட்டசபை கூட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications