ஜூன் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதுவரை மூன்று பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் ஆகிய நிகழ்வுகள் சிலநாட்கள் மட்டுமே நடைபெற்றன.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் அப்போது ஒத்தி வைக்கப்பட்டன.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் வரும் ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒரு நாளில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை தொடர்பான சில குழு உறுப்பினர்களை நியமித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சட்டசபையின் 2013-14-ம் ஆண்டுக்கான அலுவல் ஆய்வுக்குழுவின் உறுப்பினர் பதவியில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு பதிலாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ கதிரவன்
2013-14-ம் ஆண்டுக்கான பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பதவியில், எதிர்கட்சி முன்னாள் துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதிலாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ போஸ்
அரசு உறுதி மொழிக்குழு தலைவராக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) ஏ.கே.போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இந்த பதவியில் இருந்த உதயகுமார் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications