மே 25ல் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்: ஜூன் 3 ஆம் தேதி சபாநாயகர் தேர்தல்
சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வரும் ஜூன் 3 ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக 6-வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பதவியேற்றார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடை பெறவுள்ளது. புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
முதல் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தேடுக்கபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜூன் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications