25 சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு- மதுரை(மே)- உ.வாசுகி; மதுரவாயல்- பீமராவ்; பெரம்பூர்- சவுந்தரராஜன்
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பீமராவ், சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன் உட்பட தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த திண்டுக்கல் பாலபாரதிக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

வேட்பாளர்கள் விவரம்:
மதுரவயல்- பீமராவ்
பெரம்பூர்- சவுந்தரராஜன்
திரு.வி.க. நகர்- சுகந்தி
விக்கிரவாண்டி- ராமமூர்த்தி
எடப்பாடி - தங்கவேல்
கோபிசெட்டிபாளையம்- முனுசாமி
பழனி -ராஜமாணிக்கம்
திண்டுக்கல்- பாண்டி
லால்குடி- ஜெயசீலன்
நெய்வேலி- ஆறுமுகம்
சிதம்பரம் - பாலகிருஷ்ணன்
கீழ்வேளூர் ( தனி )- நாகை மாலி
நன்னிலம்- சுந்தரமூர்த்தி
கந்தவர்க்கோட்டை- சின்னதுரை
மதுரை மேற்கு- உ.வாசுகி
இராஜபாளையம்- குருசாமி
திருவையாறு- ஜீவகுமார்
பெரியகுளம் ( தனி ) - லாசர்
அம்பாசமுத்திரம் - கற்பகம்
போளூர்- செல்வன்
கோவை தெற்கு- பத்மநாபன்
விளவங்கோடு - செல்லசுவாமி
கவுண்டம்பாளையம்- ராமமூர்த்தி
கூடலூர் ( தனி )- தமிழ்மணி
திருப்பூர் தெற்கு- தங்கவேல்
இவர்களில் சவுந்தரராஜன், பீமராவ், பாலகிருஷ்ணன், தங்கவேல், லாசர், ராமமூர்த்தி, நாகை மாலி ஆகிய 7 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுவை வேட்பாளர்கள்
புதுச்சேரியில் 4 தொகுதிகளுக்கான மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் விவரம்:
1. திருபுவனை (தனி) - எல். கலிவரதன்
2. டி.ஆர். பட்டிணம் - முகமது தமீம் அன்சாரி
3. லாஸ்பேட்டை - ஏ. ஆனந்த்
4. பாகூர் - பி. சிவகாமி (பெண்)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications