லெப்ட் இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கை காட்டி.. மீடியாக்களைக் குழப்பிய விஜயகாந்த்- ஜவடேகர்!
லெப்ட் இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கை காட்டி.. மீடியாக்களைக் குழப்பிய விஜயகாந்த் - ஜவடேகர்!
சென்னை: லெப்ட்டில் இன்டிகேட்டரை போட்டு, ரைட்டில் கையை போட்டு, ஸ்டெயிட்டாக சென்று மக்களை குழப்பும் சில ஆட்டோவாலாக்களை போல, விஜயகாந்த் நேற்று பத்திரிகையாளர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், எதிர் கட்சியான தி.மு.க., கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
தே.மு.தி.க.வையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, வலுவாக தேர்தல் களத்தில் நிற்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே ரகசியமாக விஜயகாந்த்துடன் திமுக நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக-தேமுதிக
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 சீட்டுகள் வரை தருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இதில் கலாநிதி மாறன் முக்கிய பங்காற்றியதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜக பக்கம்
ஒரு பக்கம் இது நடந்தாலும், மற்றொரு பக்கம் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்கவும் முயற்சி நடந்து வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில், கடந்த மாதம் 28ம் தேதி, மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து விஜயகாந்தை சந்தித்தார்.

ஏமாற்றத்தில் பாஜக
ஆனால், அந்த சந்திப்பின்போது, பிடி கொடுக்காமல் பேசிய விஜயகாந்த் பல நிபந்தனைகளையும் விதித்ததால், அதுகுறித்து கட்சி மேலிடத்தில் சென்று தெரிவிப்பதாக கூறி பிரகாஷ் ஜவடேகர் டெல்லி புறப்பட்டு சென்றார். அடுத்த வாரம் மீண்டும் வந்து விஜயகாந்த்தை சந்திப்பேன் என்றும் ஜவடேக்கர் அப்போது தெரிவித்தார்.

திடீர் விஜயம்
இந்நிலையில்தான், திமுக-தேமுதிக கூட்டணி அமைந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், அச்சமடைந்த பாஜக மேலிடம், உடனடியாக ஜவடேக்கரை விஜயகாந்த்தை சந்திக்க அனுப்பி வைத்தது. எனவே, நேற்று திடீர் விஜயமாக பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார்.

அலைய விட்ட விஜயகாந்த்
ஆனால் ஜவடேகரை உடனடியாக சந்திக்க அனுமதி தரவில்லை விஜயகாந்த். காத்திருக்க வைத்து விட்டார். பல மணி நேர காத்திருப்பிக்குப் பின்னர்தான் அவரை தனது கட்சியின் மாவட்டச் செயலாளரின் கெஸ்ட் ஹவுஸில்வைத்து சந்திக்க அனுமதித்தார் விஜயகாந்த்.

மதிமுகவை வரச் சொல்கிறார்
இப்படியாக அலைக்கழிக்கப்பட்டு பின்னர் விஜயகாந்த்தைச் சந்தித்த ஜவடேகரிடம், இப்போது உள்ள கூட்டணி வலுவானதாக இல்லை. மதிமுக,பாமக ஆகியவற்றையும் கூட்டி வாருங்கள். வலுவான கூட்டணியாக அமையுங்கள் பார்க்கலாம் என்று கூறினாராம் விஜயகாந்த்.

மச்சானுக்கு எம்.பி சீட்
அது மட்டுமல்லாமல் மேலும் சில நிபந்தனைகளையும் விஜயகாந்த் விதித்ததாக கூறப்படுகிறது. அதாவது தனது மைத்துனர் சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் தேவை என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்தாராம். அது மட்டுமல்லாமல் தனது கட்சியின் தேர்தல் செலவுகளையும் பாஜகவே ஏற்க வேண்டும் என்றும் தேமுதிக தரப்பு கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் கேட்ட ஜவடேகர்.. அட போங்கப்பா என்ற ரேஞ்சுக்கு நொந்து போய் டெல்லி திரும்பினாராம்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications