காவிரி போராட்டங்களை தமிழக பாஜக தலைவர்கள் எள்ளி நகையாடுவது சரியல்ல : தினகரன்
காவிரிக்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை பாஜக தலைவர்கள் கிண்டலடிப்பது சரியல்ல என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சேலம்: காவிரிக்காக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை எள்ளி நகையாடும் தமிழக பாஜக தலைவர்களின் செயல் சரியானது அல்ல என்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார்.

இதில் பேசிய டி.டி.வி தினகரன், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய, மாணவர் அமைப்புகளும் போராடி வருகின்றன.
மக்களின் தொடர் அழுத்தம் தாங்க முடியாமல், மத்திய அரசின் எடுபிடியாக இருக்கும் தமிழக அரசு கூட பெயரளவில் ஒரு உண்ணாவிரதத்தை நடத்தியது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் மட்டும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை அரசியல் நோக்கத்தைக் கொண்ட நாடகங்கள் என்றும், இந்த போராட்டங்களால் ஒரு பயனும் இல்லை என்றும் எள்ளி நகையாடி வருகிறார்கள். அவர்களின் இந்தப் போக்கு சரியானது அல்ல.
கர்நாடக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய பாஜக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து காலம் தாழ்த்தி தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications