தமிழக பாஜகவிலிருந்து 2 பேருக்கு 'லட்டு' கிடைக்குமாம்...!
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலிமைப்படுத்தவும், பாஜகவை வளர வைக்க வசதியாகவும், 2 பேருக்கு அமைச்சர் பதவி தர பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.
அந்த இரண்டு அமைச்சர் பதவிகளை பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல. கணேசன் ஆகியோருக்கு அளிக்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.

தமிழகத்தில் பாஜக முதல் முறையாக மெகா கூட்டணி அமைத்தது. பெரும் எதிர்பார்ப்புடன் தேர்தலையும் சந்தித்தது. ஆனால் தமிழக மக்கள் படு தெளிவாக இருந்து 37 இடங்களை அதிமுகவுக்குக் கொடுத்து விட்டனர். மிச்சமிருந்த இரண்டு இடங்களில் ஒன்றை பாஜகவுக்கும், இன்னொன்றை பாமகவுக்கும் கொடுத்து விட்டு கட்சிகளுக்கு முட்டை போட்டு விட்டனர்.
தற்போது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பாஜக வேட்பாளரான மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது.
அதேசமயம், தேமுதிக, பாமக ஆகியவையும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றன. இதில் தேமுதிக கூடுதலாக ராஜ்யசபா எம்.பி பதவியையும் கேட்டு வருகிறது. இத்தனைக்கும் இக்கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளில் 11 இடங்களில் டெபாசிட்டைப் பறி கொடுத்து அசிங்கப்பட்ட கட்சியாகும்.
இருப்பினும் தேமுதிகவும் தேவை என்று பாஜக கருதுவதால் அதற்கும் ஏதாவது போட்டுக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜகவில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறதாம்.
பொன் ராதாகிருஷ்ணனுடன், மூத்த தலைவரும், தென் சென்னையில் போட்டியிட்டு தோற்றவருமான இல. கணேசனுக்கும் அமைச்சர் பதவி கிடைக்குமாம்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications