சந்தி சிரிக்கும் தமிழக பாஜக மோதல்! அமைச்சர்களிடமே 'மாமூல்' வசூலித்த மூத்த தலைவர்கள்- திடுக் தகவல்
தமிழக பாஜகவின் கோஷ்டி மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. அமைச்சர்களிடம் மாமூல் வசூலித்த பாஜக மூத்த தலைவர்கள் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த கோஷ்டி பூசலில் அமைச்சர்களிடம் பாஜக மூத்த தலைவர்கள் மாமூல் வாங்கிய விவகாரமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
பாஜகவை வளர்க்க கடந்த வாரம் தமிழகம் வர இருந்தார் அமித் ஷா. ஆனால் அவருடைய தமிழகம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
தமிழக பாஜகவைப் பொறுத்தவரையில் இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன்னார், தமிழிசை என நான்கு கோஷ்டிகள் உள்ளன. இதில் தமிழிசை மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.

தமிழிசைக்கு எதிர்ப்பு
தமிழிசையை பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும் என்பதில் மற்றவர்கள் உறுதியாக உள்ளனர். அதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதன் விளைவால் தமிழக வருகையைப் புறக்கணித்தாராம் அமித் ஷா.

அமித்ஷா அதிருப்தி
மேலும் உங்களுக்குள் மோதிக் கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும் என கடிந்திருக்கிறார் அமித்ஷா. முதலில் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள். இப்படி இருந்தால் எந்தக் காலத்திலும் நம்மால் வளர முடியாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டாராம் அமித்ஷா.

பொன்னார் கோஷ்டி புகார்
இதன்பின்னரும், தமிழிசையின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான புகார்களை அமித் ஷாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றது பொன்னார் கோஷ்டி. இதனால் கொந்தளித்த தமிழிசையின் ஆதரவாளர்கள் பெரிய புகார் பட்டியலையே டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம்.

சொந்த ஆதாயங்கள்...
அதில், தமிழக அமைச்சர்களின் ஊழல்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். நாம் நடத்தும் வருமான வரித்துறை சோதனைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகளை பொன்.ராதாகிருஷ்ணனும் அவர் ஆதரவு நிர்வாகிகளும் வரவேற்கின்றனர். இதற்கு ஒரே காரணம், தமிழக அமைச்சர்களிடம் இவர்கள் பல சலுகைகளைப் பெறுவதுதான் என போட்டுக் கொடுத்துள்ளனராம்.

அமைச்சர்களிடம் மாமூல் வசூல்
அதுவும் வருமான வரி அச்சத்தில் இருக்கும் அமைச்சர்களிடம் மாமூல் வாங்கி வருவதையே சில தலைவர்கள் 'கடமையாகவே' வைத்து இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த புகாரையும் பட்டியலையும் பார்த்த டெல்லி பாஜக மேலிடம் அதிர்ந்து போனதாம்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications