Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஓ.பி.எஸ் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்பார்ப்பு: வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வார்கள் என்பதற்கான விடை கிடைத்துவிட்டது. வரும் 25ஆம் தேதி முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தாக்கல் செய்யப்போகும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வரும் 25ஆம் தேதி முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யப்போகும் 5வது முழுமையான பட்ஜெட் இதுவாகும்.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏறத்தாழ ஒரு மாத காலம் நடக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று, சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் நடக்கும் சட்டசபையின் அனைத்துகட்சி தலைவர்களின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும். அப்போது எத்தனை நாட்கள் இந்த கூட்டம் நடக்கும், எந்தெந்த நாளில் எந்தெந்த மானியக்கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்படும்.

TN budget 2015-16: OPS to be presented on March 25

அதிமுக ஆட்சி காலத்தில்

கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. இதுவரை 4 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14 ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. 2014-15-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் ஒரு சில நாட்கள் நடைபெற்றது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கி, சில நாட்கள் நடைபெற்றது.

முதல்வர் பன்னீர் செல்வம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த பின்னர் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் சில நாட்கள் நடைபெற்றது.

2015ன் முதல் கூட்டத் தொடர்

2015ஆம் ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.

பிப்ரவரி 23ஆம் தேதி வரை அந்தக் கூட்டத் தொடர் நீடித்தது. இறுதி நாள் கூட்டத்தில் அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ப.தனபால் ஒத்திவைத்தார்.

25ஆம் தேதி பட்ஜெட்

இந்த நிலையில் 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்,

அதில், ‘‘மார்ச் 25ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2015-16ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 25ஆம் தேதி அவைக்கு அளிக்க வேண்டும் என்றும் 2015-16ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 28ஆம் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் குறித்துள்ளார்.

2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை 28ஆம் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் நாள் குறித்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.

வரவு-செலவு

இதன்படி, நிதி இலாகாவை தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் 25ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

இந்த பட்ஜெட்டில் 2015- 2016-ம் ஆண்டுக்கான வரவு- செலவு, புதிய திட்டங்கள், வரி மாற்றங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், அன்றைய கூட்டம் முடிந்துவிடும். மரபுப்படி அடுத்தநாள் விடுமுறை. மீண்டும் 27ஆம் தேதி சட்டசபை கூடும். அன்று ஆளுங்கட்சி தரப்பில் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.

மானியக்கோரிக்கைகள் - நிதி ஒதுக்கீடு

இந்த தீர்மானத்தின் மீது அனைத்துகட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். சில தினங்கள் நடக்கும் இந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். பின்பு ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கையை அந்தந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியவுடன், அந்தந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எகிறும் எதிர்பார்ப்பு

2011ஆம் ஆண்டு பதவி ஏற்ற அ.தி.மு.க. அரசு, 2016ஆம் தேர்தலை சந்திக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இம்முறை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தே.மு.தி.க. நிலை என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிய கருத்து ஒன்றை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கவர்னர் உரைக்கான கூட்டத் தொடர் முடிக்கப்படாமல் தொடர்ந்து நீடிப்பதால், நடக்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.

குற்றப்பத்திரிகை

அதோடு அந்த சம்பவம், உரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தே.மு.தி.க.வினரை அவையை விட்டு வெளியேற்றியபோது அவைக் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக தினகரன், சேகர் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வருவாரா?

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் கையெழுத்து போடுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று அவை நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் இருந்துவிடுகிறார். எனவே அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவாவது விஜயகாந்த் சட்டசபைக்கு வரவேண்டும் என்று தேமுதிகவினர் மட்டுமல்லாது எதிர்கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகாந்த் வருவாரா என்பதுதான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+