தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 15-ஆம் தேதி 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து 16, 17 ,18 ஆகிய 3 நாட்களுக்கு சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 19-ஆம் தேதி மீண்டும் அவை கூடியது. அன்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மானியக் கோரிக்கைகள் தாக்கலுக்காக மீண்டும் சில மாத இடைவெளி விட்டு சபை கூடும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications