சசிகலாவை சந்திக்க முதல்வர் எடப்பாடி நாளை பெங்களூர் பயணம்?
பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தமிழக முதல்வராவதற்காக சட்டசபைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்.

இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி முதல்வராக பதவியேற்க சசிகலா ஆயத்தமானபோது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச் செல்வதற்கு முன்னதாக தனது ஆதரவாளரும், அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழுத் தலைவராக சசிகலா உத்தரவின்பேரில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு களேபரங்களுக்கு இடையில் முதல்வராக எடப்பாடி பதவியேற்றுக் கொண்டார். எனினும், பெங்களூரில் இருந்தபடியே எடப்பாடியை சசிகலா இயக்குவார் என்பதால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் முதல்வராக முறைப்படி திங்கள்கிழமை எடப்பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. முதல்வராக பதவியேற்றவுடன் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடாமல் சிறையில் உள்ள குற்றவாளியை ஒரு முதல்வர் சந்திப்பதா? என்று பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications