மக்களின் கடும் அதிருப்தியை சமாளிக்க சுற்றுப் பயணம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.அப்போது நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்கள் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியல் சூழல் பெரும்பாலும் குழப்பத்திலும் பரபரப்பிலுமே உள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின் முதல்வராக எடபாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். ஆனால், அவர் முதல்வராக பதவியேற்றது பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகரில் இருந்து அவர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
மேலும், 7ஆம் தேதி அவரது சொந்த மாவட்டமான சேலம் செல்கிறார். பிறகு அங்கிருந்து திருச்சிக்குச் செல்கிறார். அடுத்தநாள், 8ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு செல்கிறார்கள்.
வரும் மார்ச் 8ஆம் முன்னாள் முதல்வர் ஓ.பனீர் செல்வம் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் சுற்றுப்பயணமும் ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications